Advertisment

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்தது தமிழ்நாடு அரசு!

Government of Tamil Nadu extends enrollment period under the Right to Compulsory Education Act!

மெட்ரிக்லேசன் பள்ளிகள் இயக்குநர் நேற்று (03/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1) (சி)இன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Advertisment

மேற்காண் திட்டத்தில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 05/07/2021 முதல் 03/08/2021 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. நாளது தேதிவரை 73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்று பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு, இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13/08/2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

schools order tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe