ADVERTISEMENT

ஒரு ரூபாயில் தமிழக அரசின், வரவு செலவுகள்!

05:49 PM Mar 18, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் இன்று (18/03/2022) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்தார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


தமிழக நிதிநிலை அறிக்கையின் படி, மாநிலத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒரு ரூபாயில் பார்க்கலாம்!

தமிழக அரசின் வரவைப் பொறுத்த வரை வரி வருவாயாக 40 காசுகளும், வரியில்லா வருவாயாக 04 காசுகளும் கிடைக்கின்றன. மத்திய வரியில் பங்காக 9 காசுகளும், மத்திய திட்ட நிதியுதவியாக 11 காசுகளும், கடன் வசூல் மூலம் 2 காசுகளும், பொதுக் கடன்கள் மூலம் 34 என ஒரு ரூபாய் வரவில் பங்கு வகிக்கின்றன.

செலவைப் பார்க்கும் போது, தமிழகத்தின் கடன் தவணையைக் கட்ட 7 காசுகளும், அரசு ஊழியர்களின் ஊதியமாக 20 காசுகளும் செலவிடப்படுகின்றன. ஓய்வூதியம், ஓய்வு பலன்களுக்கு 10 காசுகளும், இயக்கம், பராமரிப்பு பணிகளுக்கு 4 காசுகளும், மானியங்களுக்கு 32 காசுகளும் வட்டி செலவாக 13 காசுகளும் செலவாகின்றன. இவைத் தவிர முதலீட்டுச் செலவாக 12 காசுகள் இருக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT