Advertisment

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை- தமிழக அரசு அறிவிப்பு

Government of Tamil Nadu announces special queue for persons with disabilities to be vaccinated

தமிழகத்தில் கரோனாஇரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனாதொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகளை தமிழக அரசு உலகளாவியஒப்பந்தப் புள்ளிகள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெற தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் அமைக்கப்படவேண்டும். தேவைக்கேற்ப,மாற்றுத்திறனாளிகளின் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்ததுள்ளது.

Advertisment

coronavirus vaccine corona virus disabilities
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe