2022ஆம் ஆண்டுக்கான அரசுப் பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

Government of Tamil Nadu announces public holidays for the year 2022!

வருகிற 2022ஆம் ஆண்டில் 22 நாட்களை அரசுப் பொதுவிடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி ஆகிவற்றுக்கான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தையொட்டி, ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விடுமுறை தினமான 22 நாட்களில் உழவர் திருநாள், மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் ஆகிய ஆறு விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

அதேநேரத்தில், பொங்கல், புனித வெள்ளி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளிக்கிழமைகளிலும், சுதந்திர தினம், தீபாவளி ஆகியவை திங்கள்கிழமையிலும் வருகின்றன. ஆங்கில புத்தாண்டு, திருவள்ளூர் தினம், தெலுங்கு வருட பிறப்பு ஆகியவை சனிக்கிழமைகளில் வருகின்றன. ரம்ஜான், மொஹரம், ஆயுதபூஜை ஆகியவை செவ்வாய்கிழமை அன்றும், குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி ஆகியவை புதன்கிழமை அன்றும் வருகின்றன.

அதிகபட்சமாக, ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறு நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. ஜனவரி 17ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஒருவர் விடுமுறை எடுத்தால், ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Holidays order tn govt
இதையும் படியுங்கள்
Subscribe