தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர்' என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி விருதாளர்களுக்கு நினைவுப்பரிசும், 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் மேலும் 14 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.