/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201801170923243644_eri-katha-ramar-temple_SECVPF-2.jpg)
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருளாதார இழப்புகளை தனி மனிதர்கள் மட்டுமல்லாது,அரசாங்கமும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு,சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை அரசு ரத்து செய்துள்ளது. கரோனாகாரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மதிப்பூதியமும்தற்போது வழங்கப்படாது எனவும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)