ttv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் டெல்லியிடம் பேச தமிழக அரசு பயப்படுகின்றனர் என்றுடிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Advertisment

நேற்று இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விழுந்தமாவடி மீனவர்களை சந்தித்த அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " மீனவர்கள் பிரச்சனையில் தமிழக அரசு டெல்லி சென்று பேசுவதற்கே பயப்படுகின்றனர். மீண்டும் தேர்தல் வந்து நல்ல ஆட்சி அமைந்தால் மட்டுமே மீனவர்களின் பிரச்சனையை தீர்க்கமுடியும். மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடற்கொள்ளையர்கள் விவகாரத்தில் இலங்கை அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றார்

Advertisment

அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை கீழ்வேளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினரும் சந்தித்து ஆறுதல் கூறினர்.