Government is taking steps to control the rise in tomatoes says Minister Periyakaruppan

Advertisment

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தக்காளி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் இன்று தக்காளி விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலைகிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணைபசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைக்குஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.