Skip to main content

விவசாயிகளோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஈஸ்வரன்

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
agriculture




கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

விவசாய நிலங்களில் மின் கோபுரத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை முடியும் வரை திட்ட பணிகள் துவங்க கூடாது.

 

உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்க கூடாது, சாலையோரங்களில் நிலத்திற்கு அடியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களிலே ஈடுபட்டார்கள். 

 

கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக 8 இடங்களில் உண்ணாவிரதமிருந்து வருகிறார்கள். பல பேருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. 

 

விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் எத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும். உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். 

 

பேச்சுவார்த்தை முடியும் வரை மின் கோபுரம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கமாட்டோம் என்று அரசு உறுதியளிக்க வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது நம்முடைய விவசாயிகள் என்ற உணர்வுகளோடு இந்த பிரச்சினையை அணுக வேண்டும். 

 

தாமதப்படுத்தினால் விவசாயிகள் மாறுபட்ட தீவிர போராட்டங்களுக்கு தயாராகிவிடுவார்கள். இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுடைய உடல்நிலையை மேலும் சீரழித்துவிடக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'நிலத்தை அரசு கையகப்படுத்தியது சரிதான்' - நீதிமன்றம் தீர்ப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

'Government's acquisition of land is right'-Court orders

 

கடந்த அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னை கோயம்பேட்டை ஒட்டியுள்ள அமைந்தகரை பகுதியில் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு சதுர அடி 13500 ரூபாய் என குறைந்த விலையில் கொடுத்து கடந்த அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார்.

 

அந்த புகாரில், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்றைய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் திருத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில் இந்த நிலம் சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான நிலம் என அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, மனுதாரர் வைத்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசின் நிலத்தை முழுமையாக மீட்டு வேலி அமைத்து பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Next Story

“வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்” - முதல்வர். மு.க. ஸ்டாலின்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Modern technical knowledge should be used in agriculture Chief Ministeர் mk stalin

 

திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ‘வேளாண் சங்கமம் - 2023’ வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “ திமுக அரசு  பொறுப்பேற்றுச் செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 - 22 ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு சாதனையைப் படைத்திருக்கிறோம். குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காகக் கடந்த 2022 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை எட்டியிருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. அந்தச் சாதனைப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர்களுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 விழுக்காடு கூடுதல் மானியத்தை அரசு வழங்கி வருகிறது. இதற்கென 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதலாக சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில்  நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு 2821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. உழவர்களிடையே காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம். பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்த ஏதுவாக நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.

 

Modern technical knowledge should be used in agriculture Chief Ministeர் mk stalin

 

இயந்திரங்கள், தொழிற்சாலைகள், துணி நூல்கள் ஆகியவற்றுக்காகக் கண்காட்சிகள் நடத்துவதைப் போல வேளாண்மைக்குக் கண்காட்சி நடத்துவதும் மிக மிக அவசியமானது. வேளாண்மைத் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகவும் இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக நாம் சொல்லலாம். நவீனத் தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண்மை இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்கள் என ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய அடிப்படைத் தகவல்களை உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்தாக வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன. உழவர்களது உற்பத்தி அதிகமாக வேண்டுமானால் அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்.

 

நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில் இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துத் தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இது பற்றி வேளாண்மைத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்துப் பேசினேன். நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு 75 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தைப் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக உழவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.