Skip to main content

மாணவர்களுக்கு இன்ட்ராநெட் முறையில் பாடம் நடத்த வேண்டும்... ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

Government should follow intranet way to teach online class


ஆன்-லைன் வகுப்புகளை இன்டர்நெட் முறையில் அல்லாமல் இன்ட்ராநெட் முறையில் கற்பிக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன் – லைன் வகுப்புகள் பல விளவுகளை ஏற்படுத்தும் என்று தொடர்ச்சியாக அனைத்து மக்கள் அரசியல் கட்சிசார்பாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் அவர்களின் மகள் நித்தியஸ்ரீ ஸ்மார்ட் ஃபோன் வாங்க இயலாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்ததை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
 
மாற்று வழியாக இன்ட்ராநெட் (intranet தனியார் இணையம் எனலாம்) முறையில் கல்வி கற்பிக்கப்படலாம். இன்ட்ராநெட் முறையில் பல நன்மைகள் உள்ளன. Dataவிற்கு ஆகும் செலவு முற்றிலுமாக இல்லாமல் போகும் வேறு எந்தவித இடையூறுமின்றி (ஆபாச வெப்சைட்கள், ஆன்லைன் விளையாட்டுகள்) இன்டர்நெட் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாடங்கள் கற்க முடியும்.
 
இதற்கு அரசு Router வசதிகளை அனைத்து பகுதிகளிலும் பொருத்த வேண்டும். அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் முயற்சியால் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் Trainingtek LLC, Chicago based IT & eduction நிறுவனர் திருமதி.கல்பனா பாரிதாஸ் இலவசமாக சாஃப்ட்வேர் வழங்க முன்வந்துள்ளனர்.
 
இந்த இன்ட்ராநெட் முறை பள்ளி மூடப்பட்ட சூழ்நிலையில் மட்டுமல்லாமல் இயல்பான நிலையிலும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக TAB வழங்கவேண்டும். அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் கல்வி முறை அமையவேண்டும். பாகுபாடற்ற முறையை ஏற்படுத்த அரசு வழி வகை செய்ய வேண்டும் என அவர்  கூறியுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மணிப்பூரில் இணையதள சேவை தடை நீட்டிப்பு

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Extension of internet service ban in Manipur 

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

அதே சமயம் மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும், வதந்திகளும் காரணம் எனக் கூறி கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் இணைய சேவையை அம்மாநில அரசு முடக்கியது. மேலும், அதில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட எண்களைத் தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு கலவரம் குறைந்த பகுதிகளில் கடந்த 23 ஆம் தேதி முதல் இணைய சேவை வழங்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை என 5 நாட்களுக்கு மீண்டும் இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்தத் தடை உத்தரவு இன்று இரவுடன் முடியவுள்ள நிலையில், மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.