Government servant  caught while taking bribe!

Advertisment

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி அமிர்தம். விவசாய கூலித்தொழிலாளியான இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில், இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ரூபாய் ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அமிர்தம் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி, அமிர்தம் கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்சம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சுரேஷ் கையும் களவுமாக பிடிபட்டார்.