/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2587.jpg)
தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பி.கே. இளமாறன் இன்று காலை திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆசிரியர் பி.கே.இளமாறன். இவர், கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான பி.கே. இளமாறன் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் வெளியிடுவது ஆகியவற்றை முன்னெடுத்துவந்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் தனதுவீட்டில் இருந்த போதுதிடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஆசிரியர்கள் தங்களதுஇரங்கலைத்தெரிவித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)