Published on 05/06/2021 | Edited on 05/06/2021

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 14 மாதங்களான நிலையில், மாணவர்களை பிரிந்துவாடும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலககுண்டு அருகே பழைய வத்தலக்குண்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் முருகேஸ்வரி, ‘குழந்தைச் செல்வங்களே, எங்கே நீ எங்கே’ என மாணவர்களை தேடும் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கம் தற்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.