Government school teacher who helped the government primary health center

Advertisment

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துவருபவர் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன். இவர் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செய்தவர். இதனிடையே, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தரும் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பொதுமக்கள் நலனுக்காக,இரண்டு மின் விசிறிகளை வட்டார மருத்துவர் மகாலெட்சுமியிடம் வழங்கினார் ஆசிரியர் ராதாகிருஷ்ணன். இந்த நிகழ்வில் வட்டார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், செட்டிகுளம் லயன்ஸ் கிளப் செயலாளர் விஜய் அரவிந்த், தன்னார்வலர் சத்தியன், கமலேஷ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.