Advertisment

மனைவியைக் கத்தியால் குத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

Government school teacher arrested for stabbing wife

Advertisment

தேதியை தவறாக சொன்ன மனைவியைக் கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தருமபுரி மாவட்டம், நண்பர்கள் காலனியில் வசித்துவரும் அரசுப் பள்ளி ஆசிரியரான செந்தில்குமார், மது பழக்கத்தால் மனைவியோடு அடிக்கடி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (30.10.2021) காலை தூங்கி எழுந்த செந்தில்குமார், மனைவியிடம் தேதி என்னவென்று கேட்டபோது அவர் தவறுதலாகக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்த செந்தில்குமார், காய்கறிகள் வெட்டும் கத்தியால் தனது மனைவி முத்தமிழ்ச் செல்வியை வெட்டியுள்ளார்.

முத்தமிழ்ச் செல்வியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான செந்தில்குமாரை கைதுசெய்த தருமபுரி நகர காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisment

சிறையில் தேநீர் கொடுக்கப்பட்ட டம்பளரால் செந்தில்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Police investigation incident dharmapuri district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe