பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

Government school teacher arrested by police

அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளை அடித்து, பாலியல் தொந்தரவு தந்த அறிவியல் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் மருதை (59) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர் மாணவிகளிடம் அடித்தும், தரமற்ற வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்ற ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை செய்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

karur police
இதையும் படியுங்கள்
Subscribe