சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில்74 வதுகுடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்பவானிதலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கிள்ளை ரவீந்திரன் ஏற்பாட்டின் பேரில் ஆர்.எஸ்டிரஸ்ட்சார்பில் கிள்ளைகிளை நூலகத்தில்பள்ளியில் பயிலும் 300 மாணவர்களுக்கு நூலக ஆயுட்கால உறுப்பினர் கட்டணத்தையும், 600 மாணவர்களுக்குகிள்ளை ரவீந்திரன் சார்பிலும் கட்டணம் செலுத்தப்பட்டது. மொத்தமாக 900 மாணவர்களுக்கு ஆயுட்கால நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்பேசிய பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "மாணவர் பருவத்தில் அனைத்து மாணவர்களும்நூலகத்திற்குச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகத்தைமட்டுமல்லாது நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகத்தையும் படித்தால் இந்த சமூகத்தைப் பற்றியும், சமூக சிந்தனையும்வளர்த்துக் கொள்ளலாம்.எனவே மாணவர்கள் இந்தவாய்ப்பை பயன்படுத்தி அறிவுதிறனைவளர்த்துக் கொண்டுநாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட நூலகர் சங்கர், கிளை நூலகர்கள்பால்ஜோன், மற்றும் அருள், கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன்,யாஸ்மின், மைதிலி, குமார், நிறைமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரச்செல்வி, உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.