Skip to main content

செயற்கைக் கோளை நிலவில் இருந்து அனுப்பலாம்! வியக்க வைத்த அரசுப் பள்ளி மாணவர்!  

 

A government school student who was amazed at space research!

 

ஓப்பன் ஸ்பேஸ் (விண்வெளி ஆராய்ச்சி) பவுன்டேசன் நிறுவனம் லுனார் கேம்ப் 2023-க்கான விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த போட்டியை ஆன்லைன் மூலமாக நடத்தியது. இதில் 29 மாவட்டங்களிலிருந்து, 108 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதற்கட்ட தேர்வில் கலந்து கொண்டனர். 

 

இதில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 9 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பள்ளியின் மாணவன் சக்திவேல் மற்றும் தமிழ் அமுதன் ஆகிய 2  மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வுபெற்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மட்டுமே இதில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற லுனார் மாடல் வடிவமைப்பு போட்டிக்கு தகுதி பெற்ற இம்மாணவர்கள் 2 பேரும்  தங்களது படைப்புகளை பள்ளிக் குழுச் செயலாளரின் வழிகாட்டுதல்படியும் ஆசிரியர்கள் உதவியுடனும் தயார்செய்து அனுப்பினர்.

 

அதில் சக்திவேல் என்ற மாணவரின் பூமியில் இருந்து செயற்கை கோல்களை அனுப்புவதால் எரிபொருள் அதிகமாகிறது, காற்று மாசு ஏற்படுகிறது. முதலில் நிலாவுக்கு செயற்கைக்கோளை செலுத்தி பின்னர் அங்கிருக்கும் நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜனை ரோவர் மூலம் பிரித்து சேமித்து பின்னர் அங்கிருந்து செயற்கைகோளில் ரோவரை இணைத்து செயற்கைக்கோளை இயக்கினால் எரிபொருள், பொருளாதாரம் மிச்சம், காற்று மாசுவை தடுக்கலாம் என்ற  லூனார் ரோவர் லான்ச் (Lunar Rover Launch) என்ற படைப்பு மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளது.  

 

இதனையறிந்த பள்ளிக்குழுச் செயலாளர் அருள்மொழிச்செல்வன் மாணவரின் படைப்பு திறனை பாராட்டி வாழ்த்தினார். அதேபோல் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் வேல்பிரகாஷ், சுமதி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !