Skip to main content

தனி ஒருவனுக்காக இயங்கி வரும் அரசுப்பள்ளி!

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Government school running for an individual ...

 

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவனுக்காக அரசுப் பள்ளி இயங்கி வருகிற நிலையில் அந்த அரசு பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான மாணவர்கள் பயின்று வந்த நிலையில் பேருந்துநிலைய விரிவாக்கத்திற்காக அந்த பகுதியிலிருந்த வி.பி.புரம் என்ற பகுதியிலிருந்த வீடுகள் மாரியம்மாள் நகர் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் அந்த நகராட்சி பள்ளியில் தற்பொழுது முகமது ஆதில் என்ற ஒரே ஒரு மாணவன் மட்டுமே ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த ஒரு மாணவனுக்காக தலைமையாசிரியர் ஒருவர் பணியில் இருக்கிறார். முகமது ஆதிலும் இந்த ஆண்டோடு நகராட்சிப் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் அடுத்த கல்வியாண்டில் அந்த பள்ளியில் பயில்வதற்கு மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி இழுத்து மூடப்படும் நிலை உருவாகி உள்ளதாக அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதி இருக்கக்கூடிய அந்த நகராட்சி பள்ளி மூடப்படாமல் இருக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'திரும்பி போ... திரும்பி போ...'- இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Go back... Go back...'- Youth Congress struggle

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ...' என  கோஷங்களை எழுப்பி வருவதால் அந்த பகுதியில் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.