Advertisment

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களிடையே காணப்படும் அடிப்படை ஊதிய வேறுபாடு தொடர்பாக "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில்உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாகத்தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி டிபிஐ அலுவலகத்தில்இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை பா.ஜ.க. சார்பில் வி.பி.துரைசாமி, திருப்பதி நாராயணன், சுமதி வெங்கடேசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.