Advertisment

‘என் தம்பிய நீ எப்படி காதலிக்கலாம்’ - தாக்கிகொண்ட மாணவிகள்

Government school girls beaten each other in Tiruvallur

Advertisment

திருவள்ளூர் மையப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிஒருவரின் தம்பியை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் காதலிப்பதாககூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தனது தம்பியை காதலிப்பதை நிறுத்தக்கோரி மாணவியை சந்தித்து கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி சக தோழிகளுடன் இணைந்து பேருந்து நிலையத்தில் வைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியை தாக்கியுள்ளார். இதனால் மீண்டும் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பேருந்து நிலையத்தில்காத்திருந்த இரு பள்ளி மாணவிகளும்ஒருவருக்கொருவர் சரமாரியாகத்தாக்கிக் கொண்டனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் இப்படி பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

students thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe