காலாண்டுத் தேர்வு; முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Government School Examination; Headmaster involved in malpractice

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வினாத்தாள்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பவானி காமராஜர் நகர் நடுநிலைப்பள்ளியில் 6 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தமிழ் தேர்வு நடைபெற்றது. தேர்வு துவங்குவதற்கு முன்பாகவே தலைமை ஆசிரியர் வினாத்தாளை கொடுத்து விடைகளை பார்த்து எழுத சொன்னதாக தகவல்கள் வெளியானது.

இதனை அறிந்த பெற்றோர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரையின் பேரில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். காலாண்டுத் தேர்வு வட்டாரக்கல்வி அலுவலர் கண்காணிப்பில் முறையாக நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

school Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe