r

Advertisment

ஊதிய உயர்வு கேட்டு அரசு ரப்பர் தோட்டம் தொழிலாளர்கள் இன்று அரசு ரப்பர் கழகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு ரப்பர் தோட்டம் உள்ள ஓரே மாவட்டம் குமரி மாவட்டம். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் பால் தான் ஆசியாவிலேயே தரமான ரப்பர் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் 3000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்தநிலையில் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2016-ல் முடிவடைந்த நிலையில் புதிய ஊதிய உயர்வு வழங்க கேட்டு தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இதற்காக அதிகாரிகளுடன் 33 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

Advertisment

dfg

இந்தநிலையில் இன்று நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்த தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடா்ந்து 34ஆவது முறையாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.