Advertisment

கலைஞர் நினைவிடத்திற்கான அரசாணை வெளியீடு!

 Government release for kalaingar memorial!

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 2.21 ஏக்கரில் இந்த நினைவிடம் உருவாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நினைவிடத்தில் கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கடந்தசட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞருக்குநினைவிடம் அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயாரானதால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நினைவிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்குக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

kalaingar TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe