ADVERTISEMENT

“அவர்களை சிரமப்படுத்தாதீர்கள் என்றார் முதல்வர்” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

05:38 PM May 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 3வது அலையைக் கூட எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வியாபாரிகள், மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு தான் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பிரச்சாரம் மூலமாக எடுத்துச் சொல்லுங்கள், அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். 3வது அலை வந்தால் கூட எதிர்கொள்வதற்கு அரசு தயாராகி வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரத்தில் மக்களைச் சிரமப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் அரசு தனியாருக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT