Advertisment

நில அளவை கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு!   

tngovt

Advertisment

நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையைதற்பொழுது தமிழக அரசின் வருவாய்துறைவெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், நில அளவை உட்பிரிவு அமைத்தால் மேல்முறையீடு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம, வட்ட,மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணங்களை உயர்த்தி உள்ளது வருவாய்துறை. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A4)20 ரூபாயிலிருந்து50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A3)100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புலஎல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்வு. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு. பராமரிப்பு நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்வு. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக விலை நிர்ணயிகப்பட்டுள்ளது. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டநன்செய் நிலத்திற்கு50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயும், மேல்முறையீட்டின் பேரில் மறுஅளவீட்டு நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

TamilNadu government Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe