Government opening new liquor store; Mannargudi people protest;

Advertisment

மன்னார்குடி அருகே புதிய அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் அரசு புதிதாக மேலும் ஒரு மதுபான கடையை திறப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்துவருகிறது.

Advertisment

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்தும் பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டன முழக்கங்களை எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,"கரோனா தொற்றும், ஊரடங்கும் இருக்கும் வரை புதிய டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது, இந்த டாஸ்மாக் கடையை மூடவில்லை என்றால் தொடர்ந்து நாங்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்கின்றனர்.