Advertisment

அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு!  

Government official breaks house lock, steals 18 pounds worth of jewelery

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் யமுனை வீதியில் வசித்து வருபவர் சிவா. இவர், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, திருவிழாவுக்காக சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்துள்ளது. இதில் பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடி விட்டு, கொல்லைப்புறத்தின் வழியாக வெளியே சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக விருதாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisment

Cuddalore police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe