/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/431.jpg)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் முகமது ஆசிப். இவர் தனது படகு பதிவுச் சான்று புதுப்பித்தலுக்கும், டீசல் மானியம் ஒதுக்குவதற்காகவும் கடலூர் மீன்வளத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
அவரிடம் கடலூர் மீன்வளத் துறை ஆய்வாளர் மனுநீதிசோழன் மேற்கண்ட பணிகளை முடித்து தருவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது ஆசிப் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் ஆலோசனைப்படி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மனுநீதிச்சோழனை கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)