திருச்சியில் அரசு அலுவலகங்களில் ரெய்டு!

Government offices raided in Trichy

திருச்சி மாநகர பகுதியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களில் தஞ்சை ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் சோதனையில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்று, சிக்கலில் சிக்கி உள்ளனர். பெரும்பாலானவர்கள் இடைத்தரகர்கள் மூலமாகவேபணம் பெறுவதால் தற்போது இந்த சோதனையில் இடைத்தரகர்கள் முக்கிய குற்றவாளிகளாகச் சிக்கி வருகின்றனர்.

திருச்சி மாநகரில் உள்ள முக்கிய அரசு மதுபான பார்களில் அதிக பணம் புழங்குவதாக விஜிலென்ஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள எலைட் பார், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிரபல பழமுதிர் சோலைக்கு எதிரே அமைந்துள்ள பார்களில் மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஏ.சி மணிகண்டன் தலைமையிலான விஜிலென்ஸ் பிரிவினர் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் இதுவரை கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

police raid thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe