சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு!

Government offices in Chennai will be closed tomorrow ... Government of Tamil Nadu announces!

தொடர் கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்யலாம் எனத் தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாகச் சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். மழை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர்நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் எனப் பிரதமர் மோடி அப்பொழுது உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கனமழை பாதிப்பு குறித்து தொலைப்பேசி மூலம் கேட்டறிந்ததாகப் பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Chennai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe