/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt444 (1)_11.jpg)
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்கள் 8 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் உத்தரவில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீனாக மாற்றப்பட்டுள்ளார். குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரியில் டீனாக இருந்த முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக திருவாசகமணி நியமிக்கப்பட்டுள்ளார். கீழப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக சாந்திமலர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வசந்தாமணி, மருத்துவக்கல்வி இயக்குநரகத் தேர்வுக் குழு செயலாளரானார்.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக சங்குமணி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)