Advertisment

பட்டத்தை இழந்தஅரசர்; அன்றே பத்திரிகையில் வசைபாடிய கலைஞர்

write

உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் தான் சாதித்திருப்பார்கள், ஆனால் சாதாரன கிராமத்தில் பிறந்த கலைஞர் மட்டுமே சகலதுறைகளிலும் நாயகனாக கோலோச்சியிருக்கிறார். அவரது அரசில் பயணம் ஐம்பது ஆண்டுகளை கடந்துள்ளது. நாடே கொண்டாடிவரும் வேலையில் அதற்கு சொந்தகாரரான கலைஞர் குழந்தையை போல இசைவின்றி இருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisment

இளமைப்பருவம்;

k10

நாகை மாவட்டம் திருக்குவளை என்னும் விவசாயகிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழ்மையான இசைவேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கலைஞர். அவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கலைஞர் தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும்போதே மாணவநேசன் என்னும் பத்திரிக்கையை நடத்தினார். அதற்கு ஆசிரியராகவும் இருந்தார். அந்த பத்திரிகையில் பட்டத்தை இழந்த அரசர் என்னும் கார்டூன் இன்றும் தலைச்சிறந்ததாக பேசப்படுகிறது.

Advertisment

k11

நீதிகட்சியின் சிறந்த பேச்சாளரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது 14ஆவது வயதில்,சமூகஅக்கரையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிறுவயதில் வட்டார மாணவர்கள் சிலரோடு’’ இளைஞர் மறுமலர்ச்சி’’ என்கிற சங்கத்தை உருவாக்கினார். அந்த பகுதி இளைஞர்கள் தங்களின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அந்த சங்கம் பேருதவியாக அமைந்தது. சில ஆண்டுகள் கழித்து அந்த சங்கம் மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என உருபெற்றது. இது திராவிடஇயக்கத்தின் முதல் மாணவர்கள் சங்கமாக இருந்தது.

k12

தி.மு.க.கட்சியின் செய்தித்தாளான முரசொலியை கையால் எழுதி திருவாரூர் ரயிலடியில் உள்ள கருணாநிதி அச்சகத்தில் முதல்பிரதியை அச்சடித்து, அதை சைக்கிளில் கட்டிக்கொண்டு மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகித்துள்ளார்.

கலைஞர் தமிழக அரசியலில் பிரதான தலைவராக உறுமாற காரணமாக இருந்தது. , கல்லக்குடி போராட்டம். வடநாட்டவரின் ஆதிக்கத்தின் அடையாளமாக இருந்த டால்மியாபுரம் என்னும் பெயரில் இருந்த ரயிநிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு திமுக 1953 ல் நடத்திய அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் கலைஞர்.

k13

கலைஞர் மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். பிறகு ரயில்தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த போராட்டத்தில் இரண்டுபேர் இறந்தனர். கலைஞர் உள்ளிட்ட பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

k14

பிறகு திமுக 1967 இல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. அது நாள் முதல் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்ததின் விளைவாக டால்மியாபுரம் என்னும் பெயரை மாற்றி கல்லக்குடி என மாற்றினர். கலைஞரால் அந்த பெயர் மாற்றம் நடந்ததற்கு 18.1.1970 ல் கல்லக்குடியில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது, அங்கு நடந்த விழாவில் கல்லகுடிகொண்டான் என்னும் பட்டம் கலைஞருக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1971 ஜீலை 23 ம் நாள் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்கும் இலக்கியத்தில் பேசிய கலைஞருக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அரசியலில் ஐம்பது ஆண்டுகளை கடந்துள்ள கலைஞருக்கு பல கவுரவபட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சகல துறைக்கும் சொந்தக்காரரான கலைஞர் சில மாதங்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். அவர் இப்படி படுத்திருப்பது திருவாரூர் மக்களை மட்டுமின்றி தமிழகத்தையே கலங்க வைத்திருக்கிறது.

Thiruvarur kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe