Advertisment

அரசு நூலகங்களில் ஒரு மனிதன் ஒரு இயக்கம்!

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் பற்றிய இந்த நூல் , தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து அரசு நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும், மக்களவை திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி, இந்த நூல்களை நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

mk dmk

தி இந்து குழுமத்தின் 'ஃபிரண்ட் லைன்' பத்திரிகை, கலைஞரின் வாழ்நாள் சாதனைகள் குறித்து, ‘ஒரு மனிதன், ஒரு இயக்கம்’ என்ற நூலை கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி வெளியிட்டது. பொதுவாழ்வில் கலைஞர் ஆற்றிய சேவைகள், கலைஞர் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இந்த நூலை தன் சொந்த செலவில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 110 அரசு நூலகங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.!

Advertisment

Kanimozhi

தூத்துக்குடி மாவட்டம் போலவே, மற்ற மாவட்ட நூலகங்களுக்கும் இந்நூலை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் கனிமொழி.

library goverment kanimozhi kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe