மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை!

Government job for Mariappan Thangavelu!

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான அரசு வேலையை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/11/2021) நடந்த நிகழ்ச்சியில், சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் 'துணை மேலாளர் (விற்பனை)' பதவிக்கான பணி நியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

chief minister mariyappan thangavelu paralympics
இதையும் படியுங்கள்
Subscribe