/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjh.jpg)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்துமரணமடைந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது. இந்நிலையில், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜின் மகள் பெர்சி பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)