Advertisment

தமிழ்நாடு தேர்வாணையம் பெயரில் வேலை வாங்கி தருவதாக கோடி கணக்கில் ஏமாற்றிய தலைமை ஆசிரியர்

tt

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆமூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரிடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் காளியப்பன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் சண்முகசுந்தரத்திடம் அரசு அதிகாரிகள் பலர் தனக்கு நல்ல பழக்கம் இருப்பதால் அரசு வேலை எளிதாக வாங்கி கொடுப்பேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

Advertisment

இந்த வார்த்தைகளை நம்பிய சண்முகசுந்தரம் தனக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தலைமை ஆசிரியர் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் அதற்கு இலட்சகணக்கில் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

Advertisment

இதை நம்பி சண்முகசுந்தரம் அந்த தலைமை ஆசிரியரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து பணத்தை கொடுத்துள்ளார். தான் கொடுத்தது மட்டும் இல்லாமல் தனக்கு நெருக்கமான 4 பேரை அறிமுகப்படுத்தி அவர்களிடமும் பணம் வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் நடைபெற்ற தமிழ்நாடு அரசு தேர்வாணை நடத்தும் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்து கொண்டிருந்தார். இதற்கு இடையில் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் சண்முகசுந்தரத்தின் பெயர் இடம் பெறவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரம் நேராக தலைமை ஆசிரியரை சந்தித்து கேட்க, அவரோ கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் என்று சொல்லி நாட்களை தள்ளினார்.

கொஞ்ச நாள் கழித்து திரும்ப, திரும்ப போய் கேட்டபோது அதே மாதிரி மழுப்பாலான பதிலை சொல்லவும், சந்தேகம் அடைந்து மறுபடியும் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதன் பின் அந்த தலைமை ஆசிரியரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

தலைமை ஆசிரியர் காளியப்பன் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 91 பேரிடம் வேலை வாங்கித்தருவதாக சொல்லி ரூ. 1.25 கோடி வரை பணம் வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இது குறித்து சண்முகசுந்தரம் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, வழக்கை விசாரித்த நீதிபதி தலைமை ஆசிரியர் காளியப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து மாநகர குற்றபிரிவு போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe