Skip to main content

புதிய ஊராட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி... 

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

house

 

மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமத்திலும் கூரையில்லா வீடு மாற்றுவதற்கு அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அப்படிக் கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டம் இப்படிப்பட்ட பெயர்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டு தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகட்ட நிதி வழங்கப்படுகிறது. 

 

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக 72 ஆயிரம் ரூபாய் மாநில அரசின் பங்காக 98 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக 100 நாள் வேலை திட்ட மூலம் அந்தப் பணியை அவர்கள் வீடு கட்டும் பணிக்கு மேற்கொண்டால் அதற்காக 20,000 ரூபாய் தூய்மை பாரத இயக்கத்தில் கழிவறை கட்ட 12,000 இப்படி மொத்தம் இரண்டு லட்சத்தி இரண்டாயிரத்து 160 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

 

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகள் வீடு கட்டத் துவங்குவதற்கு முன்பே பல ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை பயனாளிகள் எடுத்து தங்கள் சொந்த செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது அதிகாரிகள் வீடு கட்டும் பணிகளை விரைந்து கட்டி முடிக்குமாறு பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

 

ஆனால் பயனாளிகள் தரப்பில் வீடு கட்டுவதற்குத் தேவையான மணல் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் தரப்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மூலம் வீடு கட்டும் பயனாளிகளை வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு பயனாளிகளைத் துரிதப்படுத்துமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி  கொடுக்க முயலுகிறார்கள் அதிகாரிகள். ஊராட்சித் தலைவர்கள் இதில் தலையிட தயக்கம் காட்டுகிறார்கள். 

 

உதாரணமாக கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் 1,489 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட பலர் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை. பயனாளிகளை விரைவில் வீடு கட்டி முடிக்குமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

 

அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பலரும் ஏற்கனவே அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளே முன்நின்று அதைக் கண்காணிக்க வேண்டும். அதில் எங்களைச் சம்பந்தப் படுத்தக்கூடாது இனி வரும் காலங்களில் வீடு கட்டும் பயனாளிகளை ஊராட்சித் தலைவர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும். மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தேவையான அளவு  மணல் எடுத்துக்கொள்ள தலைவர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமே இந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். நாங்களும் பயனாளிகள் பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி வலியுறுத்துவோம் என்கிறார்கள் பல்வேறு ஊராட்சிமன்றத் தலைவர்கள்.

 

இதே போன்ற பிரச்சினை தமிழகம் முழுவதும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளும் அதிகாரிகளும் சிக்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இதில் வீடு கட்டாமலே முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு ஒன்றியங்களில் கண்டறியப்பட்டு ஆய்வு நடவடிக்கையில் உள்ளது. எனவே வீடு கட்டும் திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர் மூலம் தகுந்த பயனாளிகளை தேர்வு செய்து வீடுகளை ஒதுக்கீடு செய்து தலைவர்கள் மூலம் விரைந்து பணிகள் முடிக்க அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புத் தேவை என்கிறார்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.