Advertisment

’எங்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுக்கிறாங்க’- நரிக்குறவர் சமூக மக்கள் குமுறல் 

neda

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு மருத்துவம் அளிக்க மறுப்பதாக, ஆபத்தான நிலையிலும் பிரசவங்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும் நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள காங்கேயம் திடலில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச்சேர்ந்த நரிக்குறவர் சமுதாயமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளோ, சுகாதார வசதிகளோ இல்லாத நிலையே இன்றும் நீடித்துவருகிறது அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 60க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர்.

Advertisment

அந்த மனுவில், தங்கள் பகுதியில் போதிய சாலைவசதி இல்லை , தெருவிளக்கு இல்லை, தங்குவதற்கு வசதிகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தனர். அதில் குறிப்பாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் நரிக்குறவர் சமூகத்தினரான எங்களுக்கு மருத்துவம் அளிக்க மறுக்கின்றனர். ஆபத்தான நிலமையிலும் கூட பிரசவங்களை பார்க்க மறுத்து விடுகின்றனர். அதனால் வீடுகளிலேயே பிரசவம் நடைபெறுகிறது என ஒரு அதிர்ச்சி தகவலையும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

மனுவை கொடுத்துவிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

needamangalam Government Hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe