புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ளமங்களநாடு மேற்கு பகுதியில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கப்படட்ட தகவல் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் இன்று காலை தனது டீ கடையில் உள்ள மிக்ஸியை போடுவதற்கு சென்றபோது திடீரென்று மின்சாரம் தாக்கி விஜயா (35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய நாகுடி போலீசார்அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜயாவின் சடலம் ஒரு தனியார் ஆம்புலன்சில் அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர் சடலம் கொண்டுவந்திருப்பதாக சொன்ன பிறகும் கூட ஒபி சீட்டு வாங்கனும் என்று பெயர் விபரங்களை கேட்டு ஒ பி சீட்டை கொடுத்துள்ளார். அந்த சீட்டில் மறுமுறை வரும் போது தவறாமல் இந்த சீட்டை கொண்டுவரவும் என்று குறிப்பும் எழுதப்பட்டிருந்தது.
மின்சாரம் தாக்கி இறந்தவருக்கு ஒபி சீட்டு கொடுத்து மறுமுறையும் கொண்டுவரச் சொல்றதை என்ன சொல்றது என்று உறவினர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.