/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c4333.jpg)
அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளான, பச்சிளங் குழந்தையை இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி பாக்கியலட்சுமி என்பவர் மகப்பேறுக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு நேற்று (12/02/2021) பெண் குழந்தைபிறந்தது. இவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தைபிறந்ததால், அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (13/02/2021) மதியம் 04.00 மணியளவில் அந்தக் குழந்தையின் தாயாரிடம் ஒரு பெண் 'உங்களது மாமியார்,குழந்தையை மருத்துவமனையில் உள்ள கோவிலில் வைத்து வழிபடக் கேட்பதாகக் கூறி, தாயிடம் இருந்து பச்சிளம் குழந்தையை இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். மருத்துவமனை பாதுகாவலரையும் ஏமாற்றி விட்டு, அந்த இளம்பெண் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cc345.jpg)
இந்த கடத்தல் சம்பவம் குறித்து புதுநகர் காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், இளம்பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றன.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)