Advertisment

கிறிஸ்துமஸை ஒட்டி டிச.24ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு! இந்த மாவட்டத்திற்கு மட்டும்!!

jlk

கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

25ம் தேதி அரசு விடுமுறை என்றாலும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டிகைக்கு முதல்நாளே அரசு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கு 24ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

christmas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe