hc

சாலை விபத்தில் பலியான தம்பதியின் இரு மகள்களுக்கு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

Advertisment

2009ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ஆத்தூர் பாலம் அருகே நடந்த விபத்தில் வியேந்திரன் - கலைச்செல்வி தம்பதியினர் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் இருவரும் பலியானார்கள்.

Advertisment

இதையடுத்து சென்னையில் மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் 94 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ந்த வழக்கில் 85 லட்சத்து 39 ஆயிரம் வட்டியுடன் வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து போக்குவரத்து கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு லோக் அதலாத்திற்கு மாற்றப்பட்டது. இன்று சென்னை உயர் நீதிமன்ற லோக் அதலாத்தில் வழக்கு நடைபெற்றது. போக்குவரத்து கழகம் மற்றும் இழப்பீடு கோருபவர்களிடையே சமரசம் ஏற்பட்டது.

Advertisment

அதன்படி, 1 கோடியே 5 லட்சம் ரூபாய் போக்குவரத்து கழகம் வழங்க சமரசம் ஏற்பட்டதின் அடிப்படையில், விபத்தில் பலியான நாளிலிருந்து வட்டியை கணக்கிட்டு 1 கோடியே 45 லட்சம் இழப்பீடு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதி சி.சரவணன் இழப்பீடு பெற்றவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் அரசு விரைவு போக்குவரத்து கழகம், நிர்வாக இயக்குனரான பாஸ்கரன் கலந்து கொண்டார்.