Skip to main content

“பள்ளி தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

திண்டுக்கல் மாநகரில் உள்ள பழனி ரோட்டில் இருக்கும் பாடநூல் கழக கிடங்கில் பாடநூல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

அதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். பாடநூல்களைப் பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவசப் புத்தகங்கள் கிடைக்கும்.

 

தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

 

தொடர்ந்து பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், ''தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாடப்புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளிகள் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

 

மேலும் கல்லூரிகள் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தைச் சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று அதற்கான உத்தரவை வழங்குவார்'' என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சட்டப்பேரவை  செயலாளரின் பணி நீட்டிப்பு; தலைமைச் செயலக சங்கம் கண்டனம்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Legislature Chief Secretariat Association condemned extension post of the Secretary

 

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருக்கும் சீனிவாசன், நவம்பர் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், அவரை முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்ததுடன் 3 ஆண்டுகால பணி நீட்டிப்பும் வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்த விவகாரம், கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.  

 

இது குறித்து, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பும் பதவி உயவும் கொடுத்திருப்பது விதிமீறல். பதவி உயர்வுக்காக தகுதியுள்ள பல அதிகாரிகள் காத்திருக்க,  ஓய்வு பெறும் நபருக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கொந்தளிக்கிறார்கள்  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர். 

 

இதே சீனிவாசனுக்கு, கடந்த 2018-ல் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில், சிறப்பு செயலர் நிலையிலிருந்து செயலாளர் பதவிக்கு உயர்வு அளித்தது. அன்றைய அதிமுக சபாநாயகர் தன்பாலுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் இவருக்கு செயலாளராக பதவி உயர்வு அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த விவகாரத்தை 2018-ல் கையிலெடுத்த அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், 'சீனிவாசன் பதவி உயர்வில் விதிகள் கடைப்பிடிக்கவில்லை; விதி மீறல்கள் நடந்துள்ளன என்று கடுமையாக கண்டித்திருந்தார். இது அன்றைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அப்படிப்பட்ட அந்த சீனிவாசனுக்கு, தற்போதைய திமுக ஆட்சியில், முதன்மை செயலாளராக பதவி உயர்வும், மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் கண்டிக்கப்பட்ட சீனிவாசன் என்ற அதிகாரிக்கு திமுக ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று தான் தற்போது அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.  இந்த நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பேரவை செயலக அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசித்து வருகின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்