Skip to main content

தண்ணீரை சேமிக்க மறந்த அரசு ;மழை வேண்டி பல இடங்களில் சிறப்பு தொழுகை!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

மழை வேண்டி கும்பகோணம் பகுதி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்புத் தொழுகை நடத்திவருகின்றனர். அதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைப் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. குடிதண்ணீருக்கு கூட நான்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் தேடி போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 200 நாட்களுக்கு மேலாக டெல்டா பகுதியில் மழைபொழியவில்லை, கடந்த ஆண்டு பெய்த மழைநீரையும் அதிமுக அரசு சேமித்து நிலத்தடி நீராதாரத்தை உயர்த்த வழிதெறியாமல் மிகவும் பாதுகாப்பாக கடலில் கலக்க செய்துவிட்டனர். கஜாபுயலுக்கு பிறகு ஒரு சொட்டு மழைக்கூட டெல்டா மாவட்டங்களில் பெய்யவில்லை. வழக்கமாக கர்நாடகாவில் இருந்து பெற வேண்டிய காவிரி தண்ணீரையும் அதிமுக அரசு கேட்டுப்பெற முடியாமல், ஜீன் 12 ம் தேதி திறக்கவேண்டிய மேட்டூர் அணையும் திறக்கப்படவில்லை.

 

 Government forgot to save water; special prayers for rain


வறட்சியின் கோரதாண்டவத்தினால் நிலத்தடி நீராதாரம் கிடு கிடுவென சரிந்து கீழேப்போய்விட்டது. இதனால் தண்ணீருக்கு மக்கள் அல்லல்படும் அவநிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக அரசை நம்பி பயனில்லை என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள் அங்காங்கே யாகம், பூஜை, தொழுகை, பிராத்தனை என ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் கும்பகோணம் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசல் அருகிலுள்ள திடலில் இஸ்லாமியகள் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்."தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 Government forgot to save water; special prayers for rain


ஜமாத் செயலாளர் தாவூத் கைசர் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் ஆண்கள் சட்டையை கழட்டி மாத்தி போட்டு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். அதேபோல் ஆவணியாபுரம் மற்றும் ஆடுதுறை மஹல்லா ஜமாஅத்துகள் இணைந்து இன்று காலை 7.30 மணிக்கு கிரசன்ட் பள்ளி மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிலும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உலகுக்கே நீராதார வழிமுறைகளை கண்டுபிடித்துக் கொடுத்த தமிழக மக்களை குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது நிர்வாக திறனற்ற அதிமுக அரசு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.