Skip to main content

515 கணேசன் சேவையை மறந்த அரசாங்கம்... வீடுகட்டிக் கொடுத்த லாரன்ஸ்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

515 கணேசன் என்றால் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரைத் தெரியாத மக்களே இல்லை. எங்கே ஆதரவற்றவர்களின் சடலங்கள் கிடந்தாலும் அழையுங்க 515 கணேசனை என்பார்கள். பிரசவ வலி என்று கர்ப்பிணிகள் துடிக்கும் போது 515 கணேசன் தான் நினைவுக்கு வருவார். அத்தனையும் இலவசம். இந்த சேவை செய்ய அவர் ஒன்றும் கோடீஸ்வரன் இல்லை. தினமும் பழைய இரும்பு, பேப்பர் வாங்கி விற்கும் சாதாரண மனிதன் என்றாலும்  அவருக்குள் உயர்ந்த உள்ளம் இருந்தது. 

 

home

 

கடந்த 50 ஆண்டுகளில் 5154 சடலங்களையும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளையும் ஏற்றி இருக்கிறார். பல ஆயிரம் பேர் அவரது காரில் ஏறி பிழைத்திருக்கிறார்கள். பிணம் ஏற்றுகிறவர் என்று உறவுகள் ஒதுக்கிய போது கூட ஏழைகளுக்கான  சேவையை நிறுத்தவில்லை.

 

ஊரெங்கும் சடலம் ஏற்றவும், கர்ப்பிணிகளை ஏற்றவும் ஆம்புலன்ஸ், கார்கள் வந்த பிறகும் கூட அவக்கு அழைப்புகள் உண்டு. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவைகள் வந்த பிறகு அழைப்புகள் குறைந்தது.

 

home

 

இத்தனை சேவைகள் செய்து வந்த கணேசனுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை. 5 பெண் குழந்தைகள். பெண் குழந்தைகளை படிக்கை வைத்து திருமணமும் செய்து கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனை வாங்கினார். பழைய இரும்பில் வாங்கிய தகரங்களைக் கொண்டு குடில் அமைத்து அவரும் அவர் மனைவியும் தங்கி இருந்தனர். அங்கேயே பழை இரும்பு, பேப்பர் வாங்கவும் செய்தார். அவரிடமும் சில காக்கிகள் திருட்டு பொருள் வாங்குவதாக சொல்ல மாதம் ரூ. 5 ஆயிரம் மாமூல் கேட்டதால் பழைய இரும்பு வியாபாரத்தையே விட்டார். 

 

home

 

இந்தியாவில் எங்கே புயல், வெள்ளம் பாதிப்பு என்றாலும் தனது காரில் சென்று ஊர் ஊராக நிதி திரட்டி நேரடியாக கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வந்தவருக்கு கஜா புயல் சோதனையை கொடுத்தது. பழைய தகரத்தால் அமைக்கப்பட்ட குடிலும் புயல் காற்றி பறந்து போனது. பல நாட்கள் வரை காருக்குள் தான் தங்கினார்கள். அவரிடம் இருந்த அத்தனை பொருட்களும் சேதமடைந்தது. ஊருக்கெல்லாம் உதவியவர் இருக்க இடமின்றி உடுத்த உடையின்றி தனித்து நின்றார். சில நாட்கள் அந்த கவலை.

 

 

சில நாட்களில் சுற்றிப் பார்த்தவருக்கு சொந்த மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்த்தும் தன்னை மறந்துவிட்டு புயல் பாதிக்காத மாவட்டம் நோக்கி புயல் நிவாரணம் சேகரிக்க கிளம்பினார். 

 

இப்படி ஒரு மக்கள் சேவகன் வீடு கூட இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் வேகமாக பரவியது. 

 

home

 

அரசாங்கம் வீடு கொடுக்கும், உதவிகள் செய்யும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மக்கள் எதிர்பார்ப்பில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் தகவல் அறிந்து ஓடோடி வந்தார். அய்யாவுக்கு நான் வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்றார். சொன்னபடியே ரூ. 10 லட்சத்தில் அழகான வீட்டை கட்டினார் 4 மாதங்களின் வேலை முடிந்தது. மே 14 ந் தேதியான இன்று ராகவா லாரன்ஸ் ஆலங்குடி வந்து 515. கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மாலை மரியாதை எல்லாம் செய்து வீட்டு சாவியை கொடுத்து வீட்டை திறந்து வைத்தார். 

 

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆலங்குடி மக்கள். இத்தனை சேவைகளை செய்த 515 கணேசனை கௌரவிக்க வேண்டிய அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. சேவை மனம் கொண்டவர்கள் உதவி வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இன்னும் வளரனும் அவரது வளர்ச்சி சேவைகயாக தொடரனும் என்று பாராட்டினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Next Story

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Aishwaryaa rajinikanth directing raghava lawrence Durga durga film

 

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகியுள்ளனர். 

 

இந்நிலையில் 'துர்கா' படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது 'துர்கா' படத்தை இயக்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கூட இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.