கரூரில் அரசு விரைவு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி புதருக்குள் நுழைந்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி இருந்து பெங்களூர் நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னாள்சென்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோதிய பேருந்து சாலையை ஒட்டி உள்ள புதரில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநருக்கு மட்டும் லேசாக காயம் ஏற்பட்ட நிலையில், பேருந்திலிருந்த அனைவரும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் பிறகு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.