கடந்த ஆண்டுநீட் தேர்வில்தொடங்கியஇந்த தேர்வு முறைகேடு சர்ச்சைகள்,கைதுகள்தொடர்ந்து வந்த நிலையில் தற்பொழுது அது டிஎன்பிஎஸ்சி தேர்வு வரை நீளுகிறது. குறிப்பாகடிஎன்பிஎஸ்சி குரூப்4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி, சிபிசிஐடி போலீசார்இதுதொடர்பாக பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முக்கியஇடைத்தரகராக கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார்மேற்கொண்டவிசாரணையில் 23 அரசு பணிகள்சுமார்4 கோடிக்குவிற்பனை செய்யப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

Advertisment

'Government exams' in controversy over teacher qualification

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த தேர்வு மோசடி சர்ச்சைடிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வையும், எஸ்ஐ தேர்வையும்விட்டுவைக்காமல்விடைதெரியாகேள்வியாகவே நீளுகிறது.இப்படி ஒருபக்கம் இருக்க, ஆசிரியர் தகுதி தேர்விலும்முறைகேடு நடந்திருப்பதாகவும் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில்முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டாம்தாளில்அதிக மதிப்பெண்பெற்றதாகபுகார் எழுந்துள்ள நிலையில்ஆசிரியர் தகுதித்தேர்வில்முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புஆசிரியர் பணிக்காகடெட்1 தேர்வும், 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கு ஆசிரியர் பணிக்காகடெட்2 தேர்வும்நடத்தப்பட்டது. 2012, 2013, 2014 ஆகியஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியானவர்கள்அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

Advertisment

இதில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றஆசிரியர் தகுதித் தேர்வில் குறிப்பாககொங்கு மண்டலத்தில் அதிகம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுவும் ஒரு சில தேர்வு மையங்களில் அதிக தேர்வர்கள்தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாள் ஒன்றில்4,5 என மதிப்பெண் வாங்கியவர்கள் தாள் இரண்டில்150 க்கு 140 எனமதிப்பெண் பெற்றுள்ளதாக சர்ச்சைஎழுந்துள்ளது.

இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வில்முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

இப்படி அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள்தொடர்ச்சியாக தேர்வுமுறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியையும்ஏற்படுத்தியுள்ளது.