Skip to main content

திடீரென விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! ஸ்தம்பித்த பணிகள்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Government employees suddenly taking leave!

 

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுத்த சம்பவம் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 23ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘நான்காண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

 

Government employees suddenly taking leave!

 

ஈரோடு மாவட்டத்தில் இப்போராட்டத்தின் காரணமாக ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலூகா அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைக்கு வராமல் அந்தந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

 

ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் துறை, கலால் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களின் ஊழியர்களும் முழுமையாகப் போராட்டத்தில் பங்கேற்றதால் அந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. இதே போல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 445 வருவாய்த்துறை ஊழியர்கள் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். தமிழகம் முழுக்க வருவாய்த்துறையினர் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

 

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அரசு அலுவலர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு துறையினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை?

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
teenager lost their life by jumping from the floor in Erode

ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி சபரித். இவர்களது மகன் சித்திக் (19). வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சித்திக் வீட்டின் மூன்றாவது மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென சித்திக் மேலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது சித்திக் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது சித்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திக் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எனத் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

விளை நிலங்களில் அரிசி ஆலை அமைப்பதைத் தடுக்க வேண்டும் - விவசாயிகள் மனு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Farmers petition Stop setting up of rice mills on expensive land

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமம், வள்ளிபுரம் கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன்காடு விநாயகபுதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமத்தில் பொரசேமேடு ஊர் அமைந்துள்ளது. இங்கு கருக்கம்பாளையம் கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன் காடு விநாயகபுதூர் ஆகிய கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயமாகும். மஞ்சள், நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்கள் நாங்கள் அதிக அளவில் பயிர் செய்து வருகிறோம். வளம் மிக்க செழுமையான புஞ்சை விவசாய நிலத்தினை கொண்டது எங்கள் கிராமம். கருக்கம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு மேற்படி இடத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் எங்கள் விவசாய நிலத்தினை மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சிலர் விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தின் உரிமையாளர்களிடம் கிரையம் பெற்றனர்.

இயற்கை விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தைப் பெற்று அந்த இடத்தில் நவீன அரிசி ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகள் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இந்த நிலங்கள் தரிசு நிலம் என்று வகைப்படுத்தி தவறான தகவலைக் கொடுத்தும் பொய்யான ஆவணங்களை உருவாக்கி சட்டத்திற்குப் புறம்பாக மின் இணைப்பை அரசுகளிடம் இருந்து என்ஓசி போன்ற இதர உரிமைகளைப் பெற முயற்சி செய்கிறார்கள். இந்த செயல் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதனைக் கண்டித்து கடந்த 14 ஆம் தேதி சிவகிரி மின் அலுவலகத்துக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினோம். 

இங்கே தொழிற்சாலை தொடங்கப்பட்டுவிட்டால் எங்கள் ஊரின் தண்ணீர் வளம் குன்றி நிலத்தடி நீர் வற்றி நிலமும் கெட்டுப் போய்விடும். விவசாய நிலங்களும் பாழ்படும். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காற்று மாசுபாடு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கிராமங்களில் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை கேட்டு அறிந்து உரிய நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.