ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Government employees front Trichy Collectors Office

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை உரையை மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தற்பொழுது வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி 3சதவீதத்தை வழங்கிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டு விடுப்பு சரண்டர் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் செல்வகுமார், சத்யராஜ், நாகராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe